சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் வறுத்து உண்டால் என்னாகும் தெரியுமா ?

பொதுவாக வயிற்று வலி வந்து விட்டால் நம்மை பாடாய் படுத்தி விடும் .இதை போக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

1 : ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து விடவும் .

2.பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.

3.: முருங்கை இலையில் இருந்து சாறு பிழிந்து அதோடு 50கிராம் நற்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்.

4.: உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும் 

5.பின்னர் அதை குடித்து வந்தால் தீராத வயிற்று எரிச்சல் குணமாகும்.

6.: சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து கொள்ளவும் .

7.பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்

வாரத்தில் 2 நாள் வெறும் வயிற்றில் இந்த தேநீர் பருகினால் நரம்பு தொடர்பான பிரச்னைகள் குணமாகும்

தேவையான பொருட்கள்

எலுமிச்சை இலை - 10

தண்ணீர் - ஒரு டம்ளர்

தேன் - ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் எலுமிச்சை இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, வடிகட்டி, தேன் கலந்துகொள்ளவேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள் இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதனால் தலை வலி மற்றும் தலை தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும்.

இதில் வைட்டமின் ஏ, பி1, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சிட்ரிக் அமிலம், ஃப்ளேவனாய்ட்கள், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் உள்ளது.

மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, அதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக்கி, கவலை, பதற்றம், நரம்பு தொடர்பான பிரச்னைகளை சரியாக்கும். நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த தேநீரை வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் பருகவேண்டும்.

நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் இந்த தேநீரை பருகிவர, அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும். சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். இதுபோன்ற உணவு முறை மாற்றங்கள் பல நோய்களை விரட்டியடிக்க உதவும்.

எலுமிச்சை இலையின் பயன்கள் மற்றும் சமையலறை பயன்பாடுகள்

எலுமிச்சை அளவுக்கு இணையான மருத்துவ குணங்களைக் கொண்டது எலுமிச்சை மர இலைகளின் தேநீர். எலுமிச்சை பழத்தின் நன்மைகளை மட்டும் நாம் தெரிந்துகொண்டு, இலையின் பலன்களை மறந்துவிடுகிறோம். இதில் இருந்து பெறப்படும் நன்மைகள் குறைவாக தெரிந்துள்ளது.

எலுமிச்சை இலையை கசக்கினால் அதிலிருந்து கிடைப்பது ஃபிரஷ்ஷான சிட்ரஸ் மணம். இந்த பசும் இலைகள், உங்களின் மனநிலையை மாற்றும், மனஅழுத்ததை குறைக்கும் மற்றும் உங்களை ரிலாக்ஸாக்கும் இன்னும் பலவற்றையும் செய்யும்.

எலுமிச்சை இலையின் சமையலறை பயன்பாடு

எலுமிச்சை இலைகளை நாம் நேரடியாக உட்கொள்வதில்லை. அதை டீ, சூப் மற்றும் சாஸ்களில் சேர்த்து பயன்படுத்துகிறோம். கூடுதலாக, எலுமிச்சை இலைகளை ஆயுர்வேத மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிறோம். இதை சமையலறையில் பயன்படுத்தும்போது கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

எலுமிச்சை இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், ஃபினோலிக் ஆசிட்கள், வைட்டமின் சி ஆகியவை உள்ளது.

இந்த உட்பொருட்கள், உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படுகிறது.

செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது

எலுமிச்சை இலையில் செரிமான மண்டலத்தை காக்கும் உட்பொருட்கள் உள்ளது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது. இது வயிறு உப்புசம், வாயு மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

எலுமிச்சை இலைகளில் உள்ள உட்பொருட்கள், வீக்கத்துக்கு எதிரான நற்குணங்களைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. உடல் முழுவதிலும் உதவுகிறது.

இது ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளுக்கு நன்மை கொடுக்கிறது. குடல் வீக்கம் மற்றும் மற்ற வீக்க பிரச்னைகளை சரிசெய்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

எலுமிச்சை இலையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இது தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

எலுமிச்சை இலைக்ளை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் அமைதி பெறுகிறது. இது மனஅழுத்தத்தை குறைக்கிறது. பயம், பதற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. எலுமிச்சை இலையில் உள்ள வாசம், உடல் மற்றும் மனம் இரண்டையும் காக்கிறது.

கழிவு நீக்கம்

எலுமிச்சை இலையில் உள்ள உட்பொருட்கள், கல்லீரலை காக்கிறது. அது இயங்குவதற்கு உதவியாக உள்ளது. இதனால் கழிவுநீக்கத்துக்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுவதோடு, ஒட்டுமாத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை காக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

எலுமிச்சை இலையில் கலோரிகள் குறைவாக உள்ளது. அதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது.

உங்கள் உணவில் எலுமிச்சை இலைகளை சேர்த்துக்கொண்டால், அது உங்களின் சரிவிகித உணவு திட்டத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்களின் எடை குறைப்பு அல்லது எடை மேலாண்மை பயணத்துக்கு உதவுகிறது.

பல் ஆரோக்கியத்துக்கு நல்லது

எலுமிச்சை இலைகள் அல்லது இதைப்பயன்படுத்தி தயாரிக்கப்படும் மவுத் வாஷ்கள் பல் ஆரோக்கியம் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்குகின்றன. வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் அழித்து நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

எலுமிச்சை இலையில் உள்ள ஆன்டி மைக்ரோபையல் உட்பொருட்கள், பல் பிரச்னைகளைத் தடுக்கிறது. அது கேவிட்டிஸ் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது.

கோடைக்கால சரும அரிப்பை போக்கும் 5 வீட்டு வைத்திய முறைகள்!

வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகம் எங்கும் அரிப்பும் எரிச்சலும் தோன்றக்கூடும் இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

1. துளசி இலைகள்: ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.

2. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல் அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும் முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்.

3. ஓட்ஸ்: ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும்.

4. ஆப்பிள் சிடார் வினிகர்: இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.

5. தயிர்: முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரை முகம், கழுத்து, கை, கால்களில் தடவி விடவும். 15 நிமிடம் கழித்து முகம் மற்றும் கை, கால்களை சோப்பு போட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!

நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன.

ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு மாணவனின் விடைத்தாள ஆசிரியர் ஒருவர் திருத்தும்போது ராமாயணம் தொடர்பான கேள்விக்கு அந்த மாணவனுக்கு விடை தெரியவில்லை போல. அதற்கு பதிலாக அந்த மாணவன் அதில் எழுதி இருந்ததாவது, "என் விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன்.

எனக்கு அதிகமாக மார்க் போட வேண்டும். இல்லாவிட்டால் என் தாத்தாவிடம் சொல்லி பில்லி சூனியம் வைத்து விடுவேன்" என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்த அந்த ஆசிரியர் உடனடியாக அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு உயர் அதிகாரிகளிடம் சென்றுள்ளார். அவர்களும் இதைப்பார்த்து ஷாக்காகி உள்ளனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த மாணவர் அந்த விடைத்தாளில் 100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சில சமயங்களில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான். தற்போது இந்த தகவல் தான் ஆந்திராவில் டிரெண்டிங்கில் உள்ளது.

மின்சாரமின்றி தானாகவே சார்ஜ் செய்யும் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..


.அமெரிக்காவில் உள்ள உட்டா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் ஒளி மின்னழுத்த செல் (PEC) எனப்படும் புதிய வகை பேட்டரியை உருவாக்கியுள்ளனர். PEC ஆனது சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு ஆற்றலை சேமிக்க பயன்படுகிறது.

இது தன்னைத்தானே சார்ஜ் செய்துகொள்கிறது மற்றும் 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' பயன்பாடுகளில் பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப ஆற்றல் - மின் ஆற்றல்:

இந்த பேட்டரி கண்டுபிடிப்பு குறித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இணை பேராசிரியரான ரோசன்னே வாரன் கூறுகையில், "நம்மை சுற்றியிருக்கும் வெப்ப ஆற்றலை நேரடியாக மின்வேதியியல் ஆற்றலாக மாற்றும் வகையிலான யோசனையை அடிப்படையாக கொண்டு, இந்த தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். மிகக் குறைந்த அளவிலான ஆற்றல் தேவைப்படும் இடங்களில் இது பயன்படுத்த உகந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூப்பர் கெபாசிட்டர் அல்லது பேட்டரி வடிவில் இணையம் மற்றும் விநியோகிப்பதற்கான பயன்பாடுகளுடன் மாற்றக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த சாதனத்திற்கான எங்கள் யோசனை இது.

PEC ஐ உருவாக்க, விஞ்ஞானிகள் ஒரு மின்வேதியியல் கலத்தில் பிரிப்பானாக ஒரு பைரோ எலக்ட்ரிக் கலவைப் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். வெப்பநிலை மாற்றமானது, அயனிகளை இடப்பெயர்வை உருவாக்குகிறது. இதன்மூலம் செல்களில் ஒரு மின்சார புலத்தை உருவாக்குகிறது, இதையடுத்து பேட்டரியில் ஆற்றலானது சேமிக்கப்படுகிறது.

விரைவில் பயன்பாடு:

வாரனின் ஆய்வகத்தில் பட்டதாரி மாணவரான முன்னணி எழுத்தாளர் டிம் கோவல்சிக் தெரிவிக்கையில், 'இது மின்சாரத்தை இரட்டை அடுக்குகளில் சேமிக்கிறது, இது அயனிகளின் நேர்மறை மற்றும் எதிர்மறை அடுக்குகளில் கட்டணத்தை சேமிக்கிறது. நீங்கள் கணினியை சூடாக்கி குளிர்விக்கும்போது, ​ நேர்மறை அல்லது எதிர்மறை அயனிகளின் அளவை மாற்றமடைகிறது. இதையடுத்து மின்னாற்றல் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது' என தெரிவித்தார்.

இந்த பேட்டரியானது, நினைத்த மாதிரி வேலை செய்வதாகவும், இதன் வணிகமயமாக்கலை கொண்டுவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றல் சேகரிப்பு மற்றும் சேமிப்பை மேம்படுத்த பல்வேறு அளவுருக்களை மாற்றும் பணிகளையும் விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!

இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர்.

தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் நபர்களின் பிடியில் இருந்து தப்பிக்க குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.

குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாது.தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றத்தை காண எவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

வீட்டு பூஜை அறையில் உள்ள தங்கள் குலதெய்வ படத்தை துடைத்து மாலை அணிவித்து அலங்காரம் செய்யவும்.பிறகு தங்கள் குலதெய்வதிற்கு பிடித்தவற்றை படையல் போடவும்.

பிறகு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் போட்டு குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளவும்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள்,தரித்திரம்,கெட்ட சக்திகள் நீங்கி நல்லது நடக்க மாதம் ஒருமுறை இவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்து வர வேண்டும்.

'பதிலி வாக்கு' முறையில் வேறொருவர் வாக்களிக்கலாம்: ராணுவ வீரர்களுக்கான சலுகை

ராணுவம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தங்களுக்கு பதில் வெறொருவரை வாக்குச் சாவடிக்கு அனுப்பி 'பதிலி வாக்கு' முறையில் வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், பல்வேறு வகை யான சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்கள் இடத்திலிருந்தே தபால் மூலம் வாக்குப் பதிவு செய்யும் நடை முறை தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல் ராணுவம், எல்லைப் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவோர் தங்கள் சார்பாக தேர்தலில் வெறொரு நபரை அனுப்பி வாக்களிக்கும் பதிலி வாக்கு முறை இந்த மக்களவைத் தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது.

இது குறித்து தேர்தல் அலு வலர்கள் கூறியதாவது: பதிலி வாக்கு அளிக்க விரும்பும் ராணுவ வீரர்கள், மற்றொரு நபரை தனது சார்பில் வாக்குச் சாவடிக்கு அனுப்பி வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த வாக்காளர்களை வகைப்படுத்தப்பட்ட சேவை வாக்காளர்கள் (classified service voters) என அழைக்கிறோம். இவர்கள் மட்டுமே பதிலி வாக்காளரை நியமித்து, இவர்கள் சார்பில் வேறொரு நபரை வாக்களிக்க அனுமதிக்க முடியும்.

இதற்கான வாக்காளர் பட்டியல் தனியே இருக்கும். பதிலி நபர் வாக்களிக்க வரும்போது அவரது நடுவிரலில் அழியாத மை இட வேண்டும். காரணம், பதிலி நபர் தனக்கான வாக்கை பதிவு செய்தபோது ஆள்காட்டி விரலில் மை இடப்பட்டிருப்பதால் மாற்று விரலில் இடப்படுகிறது. 17-ஏ பதிவேட்டில் பதிலி வாக்காளரை பதிவு செய்யும்போது வரிசை எண்ணை பதிந்து மற்ற வாக்காளர் பட்டியலின் தொடர் எண்ணில் இருந்து இதனை வேறுப் படுத்திக காட்ட 'பிவி' என அடைப்புக் குறியில் எழுத வேண்டும், என்று தெரிவித்தனர்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க.. நீரிழிவை குணப்படுத்த.. முடி நன்கு வளர இனி வீட்டில் இதை செய்யுங்கள்!

கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 1/8 கப்

உடைத்த கருப்பு உளுந்தம்பருப்பு - 1/8 கப்

மிளகாய் வற்றல் - 8


எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கப்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கனமான இரும்பு வாணலியை சூடாக்கி 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சேர்த்து பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.

2. அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். கடலைப்பருப்பு லேசாக நிறம் மாறும் போது கருப்பு உளுந்தை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். இரண்டு பருப்புகளும் நன்கு வறுபட்டு சிவந்ததும் தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

3. பின் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

4. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை சேர்த்து நன்கு (மிக்ஸரில் இருக்கும் கறிவேப்பிலை போல மொறு மொறுப்பாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்). பின் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.

5. வறுத்த பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த பருப்புகள் மற்றும் வறுத்த மிளகாய் வற்றல் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பின் வறுத்த கறிவேப்பிலை, வறுத்த எள்ளு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பொடி ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும். ஆரோக்கியமான சுவையான கறிவேப்பிலை பொடி தயார்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்

கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது

செரிமானத்துக்கு உதவுகிறது

கல்லீரலுக்கு சிறந்தது

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது

பாக்டீரியாவை போக்குகிறது

எடையை குறைக்க உதவுகிறது

பக்கவிளைவுகளை தடுக்கிறது

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

நீரிழிவை குணப்படுத்துகிறது

காயங்களை குணப்படுத்த உதவுகிறது

பொதுவாக கறிவேப்பிலையை நாம் தினமும் உணவில் தாளிக்க பயன்படுத்துகிறோம். ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடுவதில்லை, தூக்கி எறிந்துவிடுகிறோம். அதனால் அதன் நன்மைகள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போகும். எனவே இதுபோல் அரைத்து தொக்காக பயன்படுத்தும்போது அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இந்த பொருள்

பொதுவாக பெருங்காயம் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கியம் உண்டு இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.உணவின் சுவையைக் கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று பெருங்காயம்.
2.பெருங்காயம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
3.பெருங்காயம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

4.இது மட்டும் இல்லாமல் தலைவலி மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

5.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது. 6.குறிப்பாக உடல் எடையை குறைக்க இனப்பவர்களுக்கு இது உதவுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பெருங்காயம் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அரசு காப்பீடு நிறுவனத்தில் வேலை

அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் (The Oreintal Insurance Company Limited) உள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (12.04.2024) கடைசி நாள்.

பணி விவரம்Accounts - 20
Actuarial - 05
Engineering-15
Engineering (IT) -20
Mediacal Officer - 20
Legal - 20

மொத்த பணியிடங்கள் - 100

பணி இடம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டிலுள்ள பல்வேறு அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். இதற்கு ஓராண்டு 'Probation' காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இந்தப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக அடிப்படையாக ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். (ரூ.50,925 - 2500 (14) - 85,925 - 2710(4) - 96765)

மெட்ரோபொலிடன் நகரங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில் ரூ.85,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:அக்கவுண்ட்ஸ் பணிக்கு எம்.பி.ஏ. பி.காம். Chartered Accountanmts, Statistics உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
Acturaial பணிக்கு விண்ணப்பிக்க Statistics / Actuarial Science, கணிதம் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல். ஐ.டி. துறையில் விண்ணப்பிக்க பொறியியல் பட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மெடிக்கல் ஆஃபிசர் பணிக்கு M.B.B.S./ BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சட்டத்துறை பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல்நிலை தேர்வு


முதன்மை தேர்வு


விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

https://orientalinsurance.org.in/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2024

வயது வரம்பு, தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவலுக்கு https://orientalinsurance.org.in/documents/10182/11323865/Advertisement+DR-AO+2023-24.pdf/4b0d0904-c5a5-113d-5587-a7db32482c89 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.