25 ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் அவர்களும், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் அவர்களும், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற விவரங்கள்
அதேபோல் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா அவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment