
மத்திய பிரதேசத்தில், கிலோ, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் மாம்பழங்கள் காய்க்கும் மாமரங்களை, ஒரு தம்பதி வளர்த்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கல்ப் பரிஹார் - ராணி என்ற தம்பதி, தங்கள் தோட்டத்தில் பல விதமான தாவரங்களை வளர்த்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர்கள், சென்னைக்கு ரயிலில் சென்றபோது, உடன் பயணித்த ஒரு நபர், தன்னிடம் இருந்த இரண்டு மாமரக் கன்றுகளை இந்த தம்பதியிடம் வழங்கி உள்ளார்.அவற்றை இந்த தம்பதி, தங்கள் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தனர்.
சமீபத்தில், இந்த மாமரங்களில் காய்த்த மாம்பழங்களை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.ஜப்பான் நாட்டை சேர்ந்த மியாசாகி என்ற அரியவகை மாம்பழங்கள் காய்த்து இருந்தன.சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழங்கள், உலகின் அதிக விலையுடையவை. சர்வதேச சந்தைகளில் இந்த மாம்பழங்கள், 1 கிலோ 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
ஒரு மாம்பழம், 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாம்பழங்களை பாதுகாக்க தோட்டத்தில் ஆறு நாய்களுடன், நான்கு பாதுகாவலர்களையும், இந்த தம்பதி பணியமர்த்தி உள்ளனர்.
No comments:
Post a Comment