குழந்தைகளை தாக்க உள்ள 3ஆவது அலை! 5 தடுப்பூசிகள் வருமா!?

கொரோனா 3ஆவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று வல்லுநர்கள் கூறியுள்ளதால் 5 கொரோனா தடுப்பூசிகள் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை உருவாக தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதால் அதற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இந்த ஆய்வின் 2 மற்றும் மூன்றாம் கட்ட கிளினிக்கல் ஆய்வுக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருக்கிறது .

அதே நேரத்தில் அகமதாபாத்தில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்தியில் சைடஸ் கேடிலா தடுப்பூசி ஆய்வுகள் நடந்து வருகின்றன . அடுத்த இரண்டு வாரங்களில் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது .


முன்காப்பீடு கிடைத்தவுடன் பைசர் தடுப்பூசி இந்தியாவில் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூன் இறுதியில் பெரியவர்களுக்கு போடப்படுகிறது.

இந்நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மாடர்னா தடுப்பூசி சிறந்தது என்று கூறப்பட்டாலும் இந்தியாவில் அந்த மருந்து தொடர்பான ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 3ஆவது அலைக்கு முன்பு குழந்தைகளை காக்க வேண்டும் என்பது பெற்றோரின் வலியுறுத்தலாக உள்ளது.

No comments:

Post a Comment