இவர்களுக்கு ரூ.5000 ஊக்கத் தொகை அறிவித்த முதல்வர் !

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் , முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் என ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் கொரோனா தொற்று காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்!

காவல்துறையினர் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment