ஆன்லைன் வகுப்புக்கு.. குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் இதோ.!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. 

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. எனவே குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ: சாம்சங் கேலக்ஸி F12 விலை ரூ.9,999, ரியல்மீ C20 விலை ரூ.8,000க்குள், மோட்டோ G10 பவர் ரூ.9,999, லாவா Z2 மேக்ஸ் விலை ரூ.8,000 க்குள். இந்த போன்கள் அனைத்தும் கடந்த 3 மாதங்களில், அறிமுகமான புதிய மாடல்கள் ஆகும்.

1 comment: