மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்குமா? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்பு படிப்படியாக குறைவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் மூன்றாவது அலை வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் அதற்குள்ளாக மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால், மூன்றாவது அறை வந்தால் குழந்தைகள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்திய எய்ம்ஸ், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு அதிக அளவு எதிர்ப்பு சக்தி இருப்பதால் குழந்தைகளுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மூன்றாவது அலை அனைத்து வயதினரையும் பாதிக்கும். முதல் மற்றும் இரண்டாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதால் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment