ஆம்பூர் தொகுதியின் நெடுநாள் கோரிக்கைகள் நிறைவேறுமா?

பொதுமக்கள்மாண்புமிகுதமிழகமுதலமைச்சருக்குவேண்டுகோள்*!

1.பன்னெடுங்காலமாக ஆம்பூர் பகுதியில் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிஇல்லைஎன்பது ஏமாற்றமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் .

2.தமிழக அரசு சார்பில் ஆம்பூர் தொகுதியில் பாலிடெக்னிக் மற்றும் அரசு ஐ.டி.ஐ .இல்லை என்பது பெரும் வேதனையான நிகழ்வாகும்.

3.ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவசார் படிப்புகளைத் தொடங்கினால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மிகுந்த பயனைத் தரும் .ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றும் ஆம்பூர் வட்ட பகுதியில் அரசு கல்லூரி அல்லது அரசு பாலிடெக்னிக் அல்லது அரசு ஐடிஐ ஐயோ மருத்துவ சார்நிலை படிப்புகளும் இதுவரையில் இல்லை என்பது பெருத்த வேதனையாகஉள்ளது.

கடந்த ஆட்சிக் காலங்களில் ஆட்சி செய்த தமிழக அரசு இடமும் இந்த கோரிக்கை பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது மாணவர்கள் பயன் பெறுகின்ற வகையிலும் அடித்தட்டு ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையிலும் இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் கானல் நீராகவே உள்ளது. 

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கிராமப்புறங்களை உள்ளடக்கிய வட்டாட்சியர் பகுதியாக உள்ள நிலையில் இதுவரையில் அரசு கல்லூரி அரசு பாலிடெக்னிக் அரசு ஐடிஐ மற்றும் மருத்துவ சார் துணைநிலைப் படிப்புகள் தமிழக அரசு சார்பில் இதுவரை ஏற்படுத்தப்பட்டது பெருத்த ஏமாற்றமாக உள்ளது. 

மாண்புமிகு தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைஆம்பூர் ஆம்பூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டும் கட்டாயம் ஆம்பூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி,அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆம்பூர் சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவசார்துணைநிலைப்படிப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்று அடித்தட்டு பொதுமக்களும் இப்பகுதியின் கிராமப்புற ஏழை மாணவர்களும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள் .

No comments:

Post a Comment