இனி வங்கிக்கு செல்ல வேண்டாம். வீட்டிற்கே வந்து பணம் டெலிவரி செய்யும் எஸ்.பி.ஐ

கேஷ் பிக்கப், கேஷ் டெலிவரி, செக் பிக்கப், செக் தேவைக்கான ஸ்லிப் பிக்அப், ட்ராஃப்ட்கள் டெலிவரி, வாழ்நாள் சான்றிதழ் பிக் அப் மற்றும் கே.ஒய். சி. பிக்அப் போன்ற சேவைகளை எஸ்.பி.ஐ உங்களின் வீட்டிற்கே வந்து செய்கிறது.

நேரம்

வேலை நாள்களில் 3 மணி வரை நீங்கள் உங்களின் தேவைக்காக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கான சேவைகள் 3 மணி நேரத்தில் நிறைவேற்றப்படும். மூன்று மணிக்கு பிறகு நீங்கள் உங்களின் தேவை தொடர்பாக விண்ணபித்தால் அடுத்த நாள் உங்களுக்கு அந்த சேவை வழங்கப்படும்

தகுதி என்ன?

உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் 70 வயதிற்கு மேலானவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் செல்போன் எண் உங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கிள் அக்கௌண்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் கூட்டு அக்கௌண்ட் வைத்திருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கிக் கிளையில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் தங்களின் முகவரி இருப்பவர்களும் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இந்த சேவை இல்லை

மைனர் அக்கௌண்ட்கள் வைத்திருப்பவர்கள்

பவர் ஆஃப் அட்டார்னியில் செயல்படும் கணக்குகள்

செயல்படாத கணக்குகளை கொண்டிருக்கும் நபர்கள் மற்றும் நான் - கே.ஒய்.சி. கம்ப்ளைண்ட் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள்

என்.ஆர்.ஐ

தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள்

MACT Claims / LISSA வின் கீழ் செயல்படும் கணக்குகள்

1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற டோல்ஃப்ரீ எண்களுக்கு அழைத்து டோர் ஸ்டெப் வசதிகளுக்காக நீங்கள் பதிவு செய்ய செய்து கொள்ளலாம்

செயலி மூலம் பதிவு செய்வது எப்படி

Doorstep Banking செயலியை முதலில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களின் அலைபேசி எண்ணை உள்ளீடாக கொடுத்தால் உங்களுக்கு ஒரு ஒ.டி.பி. மெசேஜ் வரும். அதனை நீங்கள் மீண்டும் செயலியில் உள்ளீடாக கொடுங்கள். பிறகு நீங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வெர்ட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்தால் உங்களின் செயலி ஆக்டிவாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிகளை நீங்கள் சேர்க்கவோ நீக்கவோ முடியும்.

SBI doorestep banking facilities சேவைக் கட்டணங்கள் எவ்வளவு தெரியுமா?

பணம் மற்றும் பணம் சாரா அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி மற்றும் ரூ. 75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உதவி மையங்களில் உங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.

சேவைகளுக்காக எப்படி விண்ணப்பம் செய்வது?

செயலியில் லாக் இன் செய்து உங்கள் வங்கி கணக்கின் கடைசி 6 எண்களை உள்ளீடாக கொடுக்கவும்

உங்களுக்கு ஒரு ஒ.டி.பி. வரும். அதனை உள்ளீடாக கொடுத்து கன்ஃப்ர்ம் தரவும். பிறகு உங்களின் தனி தகவல்கள் அதில் இடம் பெறும்.

உங்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் முகவவி ஆகியவற்றை தேர்வு செய்யவும். உங்களுக்கு அருகே 10 கி.மீ தொலைவில் இருக்கும் எஸ்.பி.ஐ. கிளைகளை அது காட்டும். உங்களுக்கு விருப்பமான கிளைகளை தேர்வு செய்யவும்.

சேவை கட்டணங்களுடன் நீங்கள் தேர்வு செய்த சேவைகளும் அதில் காட்டும். நீங்கள் உள்ளீடாக கொடுத்த தகவல்களை செக் செய்து கொள்ளவும். பிறகு சப்ம்ட் தரவும்.

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சேவை கட்டணம் கழிக்கப்பட்டு உங்களுக்கு சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் டிஸ்ப்ளை ஆகும்.

உங்களுக்கு ஏஜென் பெயர், புகைப்படம், சேவைகளை வழங்குவதற்கான நேரம் ஆகிய தகவல்கள் அடங்கிய குறுஞ்செய்தி உங்களுக்கு வரும்.

நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை நீங்கள் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் டோர்ஸ்டெப் வங்கி சேவைகள் தொடர்பான புகார்களை மொபைல் ஆப் / வெப் போர்ட்டல் / கால் சென்டர் அல்லது வங்கி கிளை மூலம் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment