தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2021) மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் 2021 தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். முன்னதாக மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஆகஸ்ட் 1, 2021 நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
"நீட் விண்ணப்ப படிவம் 2021 ஜூலை 13 மாலை 5 மணி முதல் nta.ac.in என்ற தளத்தில் கிடைக்கும். நீட் தேர்வு (NEET Exam) எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று என்று ஒன்றிய கல்வி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
நீட்-யுஜி 2021 மதிப்பெண்கள் மூலம், 83,075 எம்பிபிஎஸ், 26,949 பி.டி.எஸ், 52,720 ஆயுஷ் மற்றும் 525 பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச், எய்ம்ஸ் 1899 மற்றும் 249 ஜிப்மர் இடங்கள் வழங்கப்படும். கூடுதலாக, இந்த ஆண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி லைஃப் சயின்சஸ் சேர்க்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
நீட் 2021 க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
நீட் தேர்வு விண்ணப்பிக்க மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய என்.டி.ஏ (NTA) நிர்ணயித்த நீட் 2021 தகுதி வழிகாட்டுதல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. இந்திய நாட்டினர், குடியுரிமை பெறாத இந்தியர்கள் (என்.ஆர்.ஐ), இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (ஓ.சி.ஐ), இந்திய வம்சாவளியைக் கொண்ட நபர்கள் (பி.ஐ.ஓ), மற்றும் வெளிநாட்டினர் ஆகியோர் NEET 2021-க்கு பதிவு செய்யலாம்.
2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2 தேர்ச்சி பெற்ற அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் / பயோடெக்னாலஜி மற்றும் ஆங்கில போன்ற முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
3. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
4. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி அடிப்படையில் குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment