அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்வு: இன்று முதல் அமல்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. 

அதன்படி அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. இவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகை ரூ.180-இல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 2021 ஜூல1 1 முதல் 221 ஜூன் 30 ஆம் தேதி வரை நான்கு ஆண்டுகளுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment