சர்க்கரை நோயாளிகளும் இந்த கொழுக்கட்டையை சாப்பிடலாம்...

சர்க்கரை நோயாளிகளுக்கு கொழுக்கட்டை கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம் வாங்க... இதில் வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்துக் கொடுக்கலாம்..

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் - அரை கப்

தேங்காய் - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

கோதுமை மாவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் தட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும், தீயின் அளவை குறைத்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாவு வாணலியில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும். இதுவே சரியான பதம். பதம் வந்ததும், அடுப்பை அணைத்து மூடி போட்டு சற்று நேரம் ஆற விடவும். சூடு சிறிது குறைந்ததும், மாவை சிறிது எடுத்து பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ஏற்கனவே கோதுமை மாவை வெல்லத் தண்ணீரில் வேக வைத்து விட்டதால் இந்த கொழுக்கட்டைகள் சீக்கிரம் வெந்து விடும். எனவே ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதுமானது. இப்போது சுவையான சத்தான கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment