பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் தைப்பொங்கலை நடுத்தர மக்கள் ஏழை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பொங்கல் தொகுப்பை அறிவித்துள்ளார்.

இந்த தொகுப்பை மக்களை நெரிசல் இல்லாமல் வாங்கி செல்ல வசதியாக விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை துறை செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். தெருக்கள் வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்களும் விநியோகிக்க பட உத்தரவிடப் பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2022ல் வர இருக்கும் தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் வழங்கப்படும் . அரசு ஒவ்வொரு பயனாளிக்கும் 505 ரூபாயை செலவிடுகிறது. இதில் விநியோகப்படும் நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள்
பச்சரிசி- 1 கி
வெல்லம்-1 கி
முந்திரி-50 கி
திராட்சை-50 கி
ஏலக்காய்-10 கி

6.பாசி பருப்பு- 500 கி
7.ஆவின் நெய்-100 கி
8.மஞ்சள் தூள்-100 கி
9.மிளகாய் தூள்- 100 கி
மல்லி தூள்-100 கி
கடுகு-100 கி
சீரகம்-100 கி
மிளகு-50 கி
14.புளி- 200 கி
கடலை பருப்பு-250 கி
உளுத்தம் பருப்பு- 500 கி
17.ரவை- 1 கி
கோதுமை- 1 கி
உப்பு- 500 கி
துணிப்பை -1
21 கரும்பு -1

No comments:

Post a Comment