கற்புறவல்லி அறிவியல் பெயர் பிலெக்ட்ரான்டஸ் அன்போயினிகஸ் கற்புறவல்லி ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்றும் அழைக்கப்படுகிறது .
இதன் இலைகள் மென்மையாக இருக்கும் இதன் சாறு பச்சையாக மெல்லும்போது நல்ல சுவை கொண்டதாக இருக்கும் கற்பூரவள்ளியை நீங்கள் பச்சையாக சாப்பிடலாம் .
தென்னிந்திய குடும்பங்கள் கண்டிப்பாக கற்பூரவள்ளியின் தொடர்புடையதாக இருக்கிறது , குழந்தைகளுக்கு மார்பு சளி , இரும்பல் , காய்ச்சல் , வரும்போது இதனை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் பச்சையாக சாப்பிடுவதற்கு .

இது குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலை போக்க உதவுகிறது இது பெரியவர்களும் சாப்பிடலாம் நாசியில் நெரிசல் மற்றும் தொண்டை புண் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது .
மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது .
வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள நாடுகளில் ஏடிஎஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி பயன்படுத்தப்படுகிறது மக்களால் வயிற்றில் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது .
மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருக்கும் உணவு வகையான பீட்சாவின் மீது சேர்த்து சாப்பிட கொடுக்கப்படும் பச்சை நிறத்தில் ஒருவித நறுமணம் மிக்க இலைகள் என்னவென்று தெரியுமா ?.
அது தான் மருத்துவ குணம் அதிகம் கொண்ட உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் , இதன் மருத்துவ குணத்தால் பல்வேறு வகையான நோய்கள் குணப்படுத்த படுகிறது நாட்டு மருத்துவத்தில் .
ஊட்டச்சத்துக்கள் பற்றிய விவரங்கள்
100 கிராம் கற்பூரவள்ளியில்
வைட்டமின் சி (3%)
இரும்புச்சத்து (204%)
விட்டமின் பி 6 (50%)
மெக்னீசியம் (67%)
கால்சியம் (159%)
வைட்டமின் ஏ (34%)
கொழுப்பு 4.3 கிராம்
சோடியம் 25 Mg
பொட்டாசியம் 1,260 Mg
9 கிராம் புரதச்சத்து
69 கிராம் கார்போஹைட்ரேட்
போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .
நீங்கள் தினமும் குறைந்தது ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும் , இதனால் உடலை பல்வேறு நோய் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து நோய்வாய்ப்படாமல் தடுக்கலாம் .
சமீபத்திய மருத்துவ ஆய்வு அறிக்கையில் ஒரு கிராம் கற்பூரவள்ளியின் ஆப்பிளை விட 42 சதவீதம் அதிக அளவில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இந்த கற்பூரவள்ளி இலைகளில் நார்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது , இந்த இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் .
கற்பூரவள்ளி இலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
காய்ச்சல் , சளி மற்றும் அடிவயிற்றுவலி போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில்போட்டு மென்று தின்பது நல்லது .
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்பூரவல்லி இலையை சாப்பிடுவது நல்லது ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் நிறைந்துள்ளது .
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது , இதயத்துடிப்பை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது .
நெஞ்சு சளியில் இருந்து கற்பூரவள்ளி எண்ணெய் விரைவில் நிவாரணம் அளிக்கும் , அதற்கு ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும் .
இதனை 7 முதல் 8 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும் .
கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.
கற்பூரவள்ளியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும் அத்தியாவசியமான வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும். நன்மை #3 சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
No comments:
Post a Comment