தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவர் சங்க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளானவர்களுக்கு ஓரிரு நாட்களில் உடல்சோர்வு மற்றும் தசைகள் வலி போன்ற அறிகுறிகளுடன் லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் சுவை, வாசனைத் திறனை இழப்பதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment