மொத்தம் 317 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய விமானப் படை (IAF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Flying Brach மற்றும் Ground Duty உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 317
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அல்லது அதற்கு தொடர்புடைய துறைகளில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 20 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.12.2021 தேதிக்குள் https://afcat.cdac.in/AFCAT/index.html எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
என்சிசி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தெர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment