தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மொத்தம் 395 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் Welder பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் மற்றும் Mechanic Diesel பணிகளுக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000 முதல் ரூ. 7,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனித்த விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பணி தொடர்பான கூடுதல் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Apply Link : Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)
No comments:
Post a Comment