இந்தியாவில் சிறு குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் 2015ல் பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் அல்லாத விவசாயம் சாராத சிறு குறு தொழில் செய்பவர்கள் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் ரூ 1 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், சிறிய பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் இந்த கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடனை பெற விரும்புபவர்கள் www.udayamimitra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். அல்லது அருகில் இருக்கும் வங்கிகளின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாம் செய்யும் வணிகத்திற்கான சான்றுகளை மட்டும் காட்டினாலே போதுமானது. வேறெந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது 6 மாதங்களாவது கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment