ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தங்கள் வேளாண் நிலம் மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக ரூ.2 கோடி தாட்கோ மூலம் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தங்கள் வேளாண் நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 2000 விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
மேற்காணும் அறிவிப்பினை தொடர்ந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 1800 விவசாயிகளுக்கும் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகளுக்கும் தங்கள் நில மேம்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய மின்மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதில், புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு ஒரு விவசாயிக்கு ரூ.10,000/- வீதம், 2000 விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.2 கோடி தாட்கோ மூலம் விடுவிக்க நிருவாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன். இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment