"10 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அதிமுக; தூசி தட்டும் அமைச்சர்" - ஆசிரியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சாவூரில் நடந்த மகளிர் சுய உதவிக் குழு நலத்திட்டத்தில் இன்று பங்கேற்றார். அவரிடம் பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வழங்கிட சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டனர். நிச்சயம் இந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். பணி வழங்குவது குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் 2,774 தமிழாசிரியர் பட்டதாரிகளுக்குத் தற்காலிகப் பணி நியமனம் வழங்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

1 comment:

  1. good ,,tamilzhachiyar pani valanghiyathrghu nanri lot of family nanamai really i am appriciate

    ReplyDelete