தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் TNPSC தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அந்த வகையில் வரும் 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி 32 துறைகளுக்கான தேர்வுகள் இந்தாண்டு நடைபெற உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் குரூப் 4 தேர்வுக்கு மட்டும் பெரும்பாலானோர் விண்ணப்பிப்பது வழக்கமான ஒன்றாகும். ஏனெனில் குரூப் 4 தேர்வு என்பது 10ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் எழுத்து தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் TNPSC தேர்வு வாரியத்தால் இந்தாண்டு நடத்தப்பட உள்ள சில தேர்வுகள், தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் மாதம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
TNPSC தேர்வுகள் மற்றும் காலிப்பணியிட முழு விபரங்கள்:
1. குரூப் 4 - 5,255 : மார்ச்
2. குரூப் 2 - 101, 2A - 5,730 : பிப்ரவரி
3. குரூப் 1 - 49 : ஜூன்
4. ஒருங்கிணைந்த இன்ஜினீரிங் சர்விஸ் - 167 : மார்ச்
5. நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவி - 245 - மே
6. ஜெயிலர் (பெண்கள்), உதவி ஜெயிலர் (ஆண்கள்) - 53 :ஜூலை
7. நூலகர் - 63 : டிசம்பர்
8. மீன்வளத்துறை ஆய்வாளர் - 59, உதவி ஆய்வாளர் - 11 : செப்டம்பர்
9. தகவல் தொழில்நுட்ப துறை - 53 டிசம்பர்
No comments:
Post a Comment