தமிழ்நாட்டில் சிறுபான்மையின மதங்களை சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, டிசம்பர் 15 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகுறிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகைத் கிடைத்து வருகிறது.
இது, கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக விண்ணபிப்பவர்களும், புதுப்பிப்பவர்களும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை வருகிற 15-12-21 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment