2020 முதல் 2021 வரையில் இந்தியாவில் இருக்கும் பல டிஜிட்டல் சேவை தளத்தில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது அனைவருக்கும் தெரியும், இத்தகையைச் சைபர் தாக்குதலுக்கு மிக முக்கியமான காரணத்தம் தத்தம் இணையதளத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தரவுகள் தான்.
இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி முக்கியமான உத்தரவை வெளியிட்டு வருகிற ஜனவரி 1 முதல் அமலாக்கம் செய்ய உள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வெளியிட்ட அமைப்பு மற்றும் கார்ட் நெட்வொர்க் தவிர வேறு எந்தொரு நிறுவனமும் அல்லது பேமெண்ட் தளமும் இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தரவுகளைச் சேமிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு
மேலும் இதற்கு முன் சேமித்து வைக்கப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தரவுகளையும் டெலிட் செய்ய வேண்டும் எனப் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் டோக்கன்
மேலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்ய வேண்டும் என்றால் கார்டு உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் டோக்கன் கொடுக்கப்படும், அதன் மூலம் பணப் பரிமாற்ற பணிகளைச் செய்துகொள்ள வேண்டும்.
மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை
இந்தப் புதிய கட்டுப்பாட்டையும் உத்தரவையும் வெளியிட மிக முக்கியமான காரணம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 1 முதல் வரும் மாற்றத்தின் மூலம் கார்டு பரிமாற்றத்தின் ஆதிக்கமும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
மாஸ்டர்கார்டு மற்றும் விசா
ஏற்கனவே இந்தியாவில் மாஸ்டர்கார்டு மற்றும் விசா அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய உத்தரவின் மூலம் கூடுதலாக வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எஸ்பிஐ கார்டு, பேடிஎம், போன்பே
இப்புதிய மாற்றத்திற்கும், டோக்கன் முறைக்கும் HSBC இந்தியா, எஸ்பிஐ கார்டு, பேடிஎம், போன்பே, NPCI ஆகியவை ஏற்கனவே தயாராகியுள்ள நிலையில் மற்ற அமைப்புகள் தயாராகி வருகிறது.
டோக்கன் முறை என்பது என்ன..?
டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நேரடியா கார்டு நம்பரை பயன்படுத்தாமல் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு 16 இலக்கம் கொண்ட டோக்கன் எண் அனுப்பப்படும், அதை வைத்துப் பணப் பரிமாற்றத்தைச் செய்யலாம்.
இதன் மூலம் பொது வெளியில் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு நம்பரை பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாகப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
16 இலக்கம் கொண்ட டோக்கன்
மேலும் இந்த டோக்கன் தத்தம் கார்டு உரிமையாளர்களுக்கும், டோக்கன் ரெக்வஸ்ட் செய்யும் விற்பனையாளர்களிடம் மட்டுமே பயன்படுத்தும் படி இருக்கும். இதனால் இந்த டோக்கன் வேறு இடத்தில் பயன்படுத்தவும் முடியாது. இது கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கிறது.
Token Requestor
இந்த டோக்கன்களை Token Requestor மூலம் பெற வேண்டும், இந்தத் தொழில்நுட்ப வசதியை தத்தம் பேமெண்ட் தளம், அமைப்புகளும் உருவாக்கும். உதாரணமாக உபர் கார் புக்கிங் சேவையில் பயணம் முடிந்த உடன் சேமிக்கப்பட்ட கார்டு மூலம் பேமேண்ட் செய்யும் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள், "Agree and Continue" கிளிக் செய்த உடன் OTP வரும் அதை வைத்துப் பேமெண்ட்-ஐ முடிக்கலாம்.
No comments:
Post a Comment