2022: ஜனவரி 3-ம் தேதி முதல் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை வகுப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 முதல் 12-ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அதே போல்‌, 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்‌கள் பள்ளி செல்லாமல்‌ பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும்‌ மன அழுத்தத்தையும்‌, கற்றல்‌ இடைவெளியையும்‌ இழப்பையும்‌ ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர்கள்‌, தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கும் கடந்த மாதம் முதல்‌ நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியது. இந்த வகுப்புகள் அனைத்தும் அரசு வழங்கி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை வகுப்பு ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது; தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்,3.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment