குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம்.! முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

வடகிழக்கு பருவமழை நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் முதல் நல்ல மழை பெய்து இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் நீர் நிலை நிரம்பி வழிந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.‌ இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருந்தது. மக்கள் இருப்பிடங்களில் தண்ணீர் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அடுத்த வாரம் இதற்கான நிவாரணம் மக்கள் கையில் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment