ஜனவரி 3-ம் தேதி முதல் தினசரி வகுப்பு நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.. எனினும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. இதையடுத்து கடந்த நவம்பர் 1-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன..
எனினும் தற்போது அரசு வழங்கி உள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தினசரி முறையில் வகுப்பு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகளில் சுழற்சி முறைக்கு பதில் தினசரி வகுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது..
இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்புக்கு தினமும் வகுப்பு நடத்துவது குறித்து டிசமர் 25-க்கு பிறகு மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்திலும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதால் முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்..
No comments:
Post a Comment