ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள்www.CivilServiceCoaching.comஎன்ற இணையதளம் மூலம் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமை பணித்தேர்வு பயிற்சி மையம் சென்னை மற்றும் அண்ணா நுாற்றாண்டு குடிமை பணித்தேர்வு பயிற்சி நிலையங்கள் கோவை, மதுரை பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் மத்திய தேர்வாணையம் அடுத்த ஆண்டு ஜூன் 22ல் நடத்த உள்ள குடிமைப் பணி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஏற்கனவே இப்பயிற்சி மையங்களில் முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் தகுதி உடைய நபர்கள் ஜன.23ல் நடக்கும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Upsc IAS 2022 to 2023 Tamil medium
ReplyDelete