பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
அதாவது கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் குறிப்பாக 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பொதுத் தேர்வு மே மாதம் நடைபெறும் என்ற ஒரு கருத்தை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முழுமை அடைந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஒரு சில தினங்களில் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட இருக்கிறார்.
பொதுத்தேர்வுகள் பொறுத்தவரை வழக்கமாக மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். ஆனால் பள்ளிகள் தாமதமான சிறப்பு காரணமாகவும் இன்னும் பாடத் திட்டங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப் படாத நிலைய இருப்பதன் காரணமாகவும் பொதுத்தேர்வுகள் தள்ளிப் போகிறது. அந்த வகையில் மே மாதத்தில் இந்த பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் மூன்று வகுப்பு மாணவர்களுக்குமே 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பத்தாம் வகுப்பு பொது தேர்வை பொருத்தவரை கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்களும் 11 மற்றும் 12.ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவர்கள் முதல் 9 லட்சம் மாணவர்கள் வரை எழுதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த பொதுத் தேர்தலுக்கான மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தயாரிக்கக்கூடிய பணிகள் எல்லாம் தேர்வுத்துறையில் மும்முரமாக நடந்து வரும் நிலையில் மிக விரைவில் தேர்வு அட்டவணை வெளியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment