தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது.
அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம்.
சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக நீங்கும் என்கிறார்கள்.
தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெயின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. மேலும் கோடைகாலங்களில் தேங்காய் எண்ணையை மேற்புற தோலில் பூசி கொள்வதால் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தோலை பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment