கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் புத்தகங்கள்.! தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் சார்ந்து முந்தைய ஆண்டுகளில் விடுபட்ட 40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்க 10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; 2021-22 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பெறப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய இயக்குனரின் கருத்துப்படி இத்துறையின் மூலம் இயங்கி வரும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்கள் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வருவதால் மத்திய, மாநில மற்றும் இதர அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இப்போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்தி அதில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக புத்தகங்களை வழங்க 10 லட்சம் ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment