ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.. பெயர், முகவரி போன்ற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்..?.
இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. இது ஒரு அடையாள ஆவணம் மட்டுமல்ல, தனிப்பட்ட விவரங்கள், தனிநபர்களின் பயோமெட்ரிக் தகவல் போன்ற முக்கியமான தகவல்களைக் கொண்டிருப்பதால், வங்கிகள், சொத்து போன்றவற்றின் பரிவர்த்தனைகளில் பல பொது மற்றும் தனியார் துறைகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்கள் எல்லா நேரங்களிலும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், ஒரு நபர் தங்களின் ஆதார் தகவல்களை எத்தனை முறை புதுப்பிக்கலாம் என்பதற்கு வரம்பு இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. ஆதாரில் மேற்கொள்ளப்படும் பல மாற்றங்களை ஆன்லைனில் செய்யலாம்.. ஒரு சில மாற்றங்களுக்கு முக்கியமான ஆவணங்களுடன் அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பார்க்க வேண்டும்.
ஆதார் தகவல்களை எத்தனை முறை மாற்றலாம்..? தனிநபர்கள் ஆதார் அட்டையில் தங்கள் பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும். உங்கள் பிறந்த தேதியை நீங்கள் மாற்ற விரும்பினால், அட்டையின் அசல் தேதி அல்லது கடைசி மாற்றத்திற்கு இடையே மூன்று ஆண்டுகள் வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதனை மாற்ற முடியும்.. இருப்பினும், அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
இது தவிர, மொபைல் எண் போன்ற ஆதார் அட்டையில் உள்ள மற்ற விஷயங்களை மாற்ற வேண்டுமானால், ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். இந்த அனைத்து மாற்றங்களுக்கும், ஆதார் மையத்தில் சிறிது கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment