எந்தெந்த நேரத்துல எவ்வளவு தண்ணீர் குடிச்சா ,இதயத்தை காப்பாத்தலாம் தெரியுமா ?

எல்லோரும் போதுமான அளவு சுத்தமான (நல்ல) தண்ணீரை குடித்தால், உலகில் ஐம்பது சதவிகிதம் மாரடைப்பு குறையும் . தேவையான நீர் உடல் அமைப்பில் இல்லாதபோது இதயத்திற்கு ஏற்படும் சேதம் மிக அதிகமானது . ஆனால் தண்ணீர் என்று சொல்லும்போது , அது நீர் ( பச்சைத் தண்ணீர் ) குடிப்பது மட்டுமல்ல . நீங்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுவதும் முக்கியம் .


காய்கறிகள் ,

ஒரு பழத்தில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது . காய்கறிகள் மற்றும் பிற விஷயங்களில் எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமான நீர் சத்து உள்ளது . நீங்கள் சாப்பிடும் உணவில் குறைந்தது எழுபது சதவிகிதம் தண்ணீர் இருக்க வேண்டும் . ஆனால் உலகின் மேற்கு பகுதியில் - இப்போது அது நிச்சயமாக மாறிக் கொண்டிருக்கிறது , மக்கள் இந்த விஷயங்களைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் , இங்கு பொதுவாக மக்கள் சாப்பிடுவது மிகவும் உலர்ந்து ( காய்ந்து ) போன உணவாக இருக்கிறது . இங்கு இருக்கும் அனைத்தும் பொதுவாக உலர்ந்தவை . இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு , இப்பகுதிகளில் , மக்கள் காய்கறிகள் எதையும் சரியாக சாப்பிடவில்லை .. இப்போதுதான் மக்கள் அதில் அதிக கவனம் கொடுக்கிறார்கள் .

நீங்கள் சாப்பிடும் உணவு மிகக் குறைவான நீர்ச்சத்துள்ளதாக இருக்கிறது . அது போய் கான்கிரீட் போல , உங்கள் வயிற்றில் உட்கார்ந்து கொள்ளும் . இப்போது நீங்கள் தண்ணீர் , தண்ணீர் , தண்ணீர் எனக் குடிக்கிறீர்கள் - அது உதவாது . நீங்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் . நீங்கள் உணவை உட்கொள்ளும்போது , குறைந்தபட்சம் அது உங்கள் உடலில் உள்ள நீரின் சதவீதத்துடன் சமமாக இருக்க வேண்டும் . அதனால்தான் காய்கறிகள் , பழங்கள் நம் அன்றாட உணவின் பகுதியாக இருக்க வேண்டும் . நீங்கள் ப்ரெட் சாப்பிட்டால் , நீங்கள் சாப்பிடும் ப்ரெட் பொருத்து , ஏறக்குறைய 25 அல்லது அதற்கும் குறைவாகவே நீர்ச் சத்து கொண்டதாக இருக்கிறது . மாமிசம் அதை விடவும் நீர்ச்சத்து குறைந்ததாக இருக்கிறது .

எனவே நீங்கள் ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணும்போது , உங்களுக்கு கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் , நான் உங்களுக்குச் சொல்கிறேன் , மருத்துவர்கள் இன்னமும் இருபது , முப்பது வருடங்களுக்கு பிறகு இதைப் பற்றி பேசுவார்கள் . அவர்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் , இதய நோயினால் ஏற்படும் இறப்புகள் உலக அளவிலேயே ஐம்பது சதவிகிதம் குறைந்துவிடும் .

எனவே , சில சந்தர்ப்பங்களில் தண்ணீரை உட்கொள்ளாமல் இருப்பது பரவாயில்லை . ஆனால் தாகத்தின் அறிகுறி இருந்தால் , நீங்கள் நிச்சயம் தண்ணீர் குடிக்க வேண்டும் . ஏனென்றால் உடல் தன் வழியில் உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறது . உங்களுக்கு தண்ணீர் தேவை என்று அது குறிப்பிடும் போது , நீங்கள் இருபது நிமிடங்களுக்குள் அல்லது குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்குள் தண்ணீர் குடிக்க வேண்டும் , நீங்கள் கணிசமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் . நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் , பிறகு எவ்வளவு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும் , எவ்வளவு நீரை நிராகரிக்க வேண்டும் என்பதை அது தேர்வு செய்து கொள்ளும் .

No comments:

Post a Comment