TNPSC குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வில் 5255 பணியிடங்கள்

TNPSC Group 4, TNPSC group 2, 2a exams date: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தில் பணியாளர்கள் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த வருடம் (2022) தமிழக அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்கள், தேர்வு அறிப்புகள் மற்றும் தேர்வு வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்பில், 2022-ம் ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இதில் வரும் பிப்ரவரி மாதம் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சுமார் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மார்ச் மாதம் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த தேர்வில் தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் மதிப்பெண்கள் பெரும்போது அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குருப் 4 மற்றும் விஏஓ பதவிகள்

குருப் 4 பிரிவில், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சு செய்பவர் (டைப்பிஸ்ட்) ஸ்டெனோ டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரையாளர் ஆகிய பதவிகள் உள்ளன. விஏஒ பிரிவில், கிராம நிர்வாக அலுவலர் பதவி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மேலும் டிஎன்பிஸ்சி தேர்வுகளில் இனியும் முறைகேடு நடக்காது என்று கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது பணியில் இல்லை என்றும், தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்கானிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment