தமிழ் வழியில் படிப்பவர்களுக்குத் தேர்வு கட்டணம் இல்லை.. தேர்வுத்துறை அதிரடி உத்தரவு..!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து வரும் 20-ம் தேதிக்கும் ஆன்லைனில் செலுத்திட வேண்டும் என்றும், 'தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது' என்றும் மேலும் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதாவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment