காய்கறி கடைகளில் அம்மா கொசுறாக வாங்கி வரும் கொத்தமல்லியின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
அதனால் தான் சாப்பிடும் போதும் அதை தனியே எடுத்து ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால், இனி கொத்தமல்லியை அப்படி ஒதுக்கி வைக்காதீங்க.
கொத்தமல்லிக்கு 'பச்சை தங்கம்' என இன்னொரு பெயரும் உண்டு. உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துகளை அள்ளித்தரும் அரிய மூலிகை தான் கொத்தமல்லி. பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ள கொத்தமல்லியின் விதை, இனிப்பு, கசப்பு, துவப்பு, கார்ப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
ஆனால், நாமோ இதை உணவை அலங்கரிக்கும் பொருளாகதான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம்.
கொத்தமல்லியால் கிடைக்கும் நன்மைகள்:
உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்து, புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை சரி செய்யும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும்
தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இதை ஒரு டம்ளர் சாறு எடுத்து குடித்தாலே போதும் என்கின்றது ஆயுர்வேதம்.
வாய்ப்புண்களை குணப்படுத்தும்
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்.
இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்டதால் தான், வெளிநாடுகளில் க்ரீன் ஜூஸ் குடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதில் ஒரு ஜூஸாக கொத்தமல்லி ஜூஸையும் சேர்த்து குடித்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு குறைவால் அடிக்கடி காய்ச்சலால் கஷ்டப்படுவர்கள், கொத்தமல்லி, கறிவேப்பிலை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment