மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்திய தபால் துறை நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றுதான் மாத வருமானத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால் போதும்.
இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகை பென்ஷன் போல வந்து கொண்டே இருக்கும். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் தனிக் கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். திருமணம் ஆனவர்கள், கணவன் - மனைவி இணைந்து கூட்டுக் கணக்காக திறக்கலாம். ஆரம்ப முதலீடு 1000 ரூபாய் போதுமானது.
இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் அதிகபட்ச முதலீடு ரூ.9 லட்சம். மாத வருமானத் திட்டத்துக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதமாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆதார் கார்டு கட்டாயம். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 கொடுக்க வேண்டும். இத்திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் ஆன்லைனில் கிடைக்கும். அதைப் பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பங்குச் சந்தை போன்ற நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், அதில் ரிஸ்க் அதிகம்.
எனவே, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும். இதில் ரிஸ்க் இல்லை. அரசின் பாதுகாப்பும் உள்ளது.
No comments:
Post a Comment