தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு 'டிரான்ஸ்பர்' பெற்றுத் தருவதாகக் கூறி, வசூல் வேட்டை நடப்பதாக கல்லுாரிக் கல்வித்துறையில் சர்ச்சை எழுந்துள்ளது.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 7198 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர்.
உதவி பேராசிரியர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி காலியாக உள்ள 1895 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் 2022 டிசம்பர் முதல் நான்கு கட்டங்களாக 'மெரிட்' அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சம்பளம் குறைவு என்றாலும் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் பணியிடம் காலியாக இருந்தாலும், தொலைதுார மாவட்டங்களில் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களிடம் கல்லுாரிக் கல்வித் துறையை சுற்றித்திரியும் புரோக்கர்கள் சிலர், கவுரவ விரிவுரையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு சொந்த மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் பெற்றுத்தருவதாகக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர். இதற்காக பணத்தை நேரில் எல்லாம் தரவேண்டாம்.
'ஜி பே' மூலம் அனுப்பினால் போதும் எனக் கூறி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை பேரம் நடக்கிறது.இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: யு.ஜி.சி., தகுதியான நெட்/செட் அல்லது பிஎச்.டி., முடித்துள்ளோம்.
கல்வித் தகுதி, பி.ஜி., மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டோம். 'மெரிட்' என்ற பெயரில் நியமிக்கப்பட்டாலும் சொந்த மாவட்டத்திற்கு 'டிரான்ஸ்பர்' என்ற ஆசை காட்டி இப்போது வசூல் செய்கின்றனர். ரூ.20 ஆயிரம் சம்பளத்திற்கும் இப்படி ஒரு சோதனையா என நொந்துபோய் உள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment