சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று மார்ச் 29ஆம் தேதி புதன்கிழமை இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்றைய தினம் சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. கோவில்களில் சனி பகவானுக்கு சிறப்பு லட்சார்ச்சனை, அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றன. சனி பகவானின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமா? இந்த சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது? என்று பார்க்கலாம்.
பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே திருநள்ளாறு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருநள்ளாறு கோயில் வழக்கப்படி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன. ஜூன் மாதத்தில் சனிபகவான் வக்ரமடைந்து மீண்டும் பின்னோக்கி சென்று மகர ராசியில் பயணம் செய்வார். அக்டோபர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்து இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் கும்ப ராசியில் பயணம் செய்யும் காலத்தையே சனி பெயர்ச்சியாக திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடைபிடிக்கின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று சனி பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 28ம் தேதி வரை காலை வரை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் பங்கேற்றனர்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபங்களை அள்ளிக்கொடுப்பார் சனிபகவான். அதே நேரத்தில் சனி பகவான் சில மாதங்கள் வக்ர கதியில் பின்னோக்கி செல்வார். அப்போது அவசரப்பட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சனிபகவான் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தேடி தரப்போகிறார்.
ரிஷபம்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் பயணம் செய்கிறார். இது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அம்மாவினால் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தேடி வரும். அதே சமயம் உடல் ஆரோக்கியம் சற்று சுமாராகவே இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம்.
மிதுனம்

சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டமத்து சனி முடிந்து விட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் சில மாதங்களில் சனிபகவான் வக்கிர நிலையில் செல்லும் போது மீண்டும் சிக்கல்கள் ஆரம்பமாகும். இந்த கால கட்டத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. வேலை கிடைப்பதில் தடைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். சனிக்கிழமை காலையில் சனி ஹோரையில் சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். இப்போது உடல் ஆரோக்கியத்தில் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சனி பகவான் வக்ரமடையும் காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் உங்களை தேடி வரும். வீட்டிலும் அலுவலகத்திலும் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். புதிய வேலைக்கு மாறும் முன்பாக நன்கு ஆலோசித்து செய்யவும். உடல் நலனில் அக்கறை காட்டவும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். சிக்கல்கள் நீங்க குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
No comments:
Post a Comment