நுரையீரலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரைவில் வெளியேற்ற ஆயுர்வேதம் சொல்லும் இந்த எளிய வழிகளே போதுமாம்...!


காற்று மாசுபாடு இந்தியாவில் பெரிய பிரச்சினையாக மாறிவருகிறது. இந்தியாவில் காற்று மாசுபாடு ஆபத்தான விகிதத்தில் வளர்ந்து வருகிறது.

உலக காற்று தர அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 35 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. காற்று மாசுபாட்டின் காரணமாக, நுரையீரல் தான் நம் உடலில் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாகும்.

காற்று மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை இரண்டும் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இந்த சூழலில் உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது மிகவும் சிக்கலானதாகத் தோன்றலாம், ஆனால் நுரையீரல் நச்சு நீக்கம் மிகவும் எளிதானது. ஆயுர்வேதம் என்பது ஒரு பழங்கால நடைமுறையாகும், இது நுரையீரல் நச்சுத்தன்மை உட்பட பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது. எனவே உங்கள் நுரையீரலை நச்சு நீக்கி, எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில ஆயுர்வேத குறிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

புதினா இலைகளுடன் ஆவி பிடிப்பது

நீராவி குளிர் காலத்தில் நாசியைத் திறக்க உதவுவது மட்டுமல்லாமல், வீட்டிலேயே உள்ள நுரையீரல் சுத்தப்படுத்துவதற்கு சிறந்தது. ஆவி பிடிப்பது நுரையீரலை சுத்தப்படுத்துவதற்கான ஒரு நடைமுறை நடவடிக்கையாகும். இதனை மேலும் சிறப்பாக்க, ஆயுர்வேதம் நுரையீரலைச் சுத்தப்படுத்துவதற்கு ஏற்றதாகக் கருதும் சில பொருட்களைச் சேர்க்கலாம். புதினா இலைகள் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். புதினா இலைகள் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சூடான நீராவியில் சேர்ப்பது தடைபட்ட காற்றுப்பாதைகளைத் திறப்பது மட்டுமல்லாமல், சளியை வெளியேற்றவும் மற்றும் நுரையீரலில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து துகள்களை அகற்றவும் உதவுகிறது.

நாசியில் எள் எண்ணெய் விடுவது

எள் எண்ணெய் பல மருத்துவ மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நுரையீரலுக்கு பெரிதும் பயன்படுகிறது. ஒவ்வொரு நாசியிலும் இரண்டு துளிகள் எள் எண்ணெயை விடுவது நாசிப் பாதையை சுத்தப்படுத்துகிறது மற்றும் மிகவும் மாசுபட்ட சூழலில் நுரையீரலுக்கு நச்சு நீக்கும் பொருளாக செயல்படுகிறது. இந்த நடைமுறையை ஆயுர்வேத நூல்கள் 'நாஸ்யா' என்று அழைக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவுவதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நாஸ்யா சிறந்தது.

இஞ்சி டீ

பால் மற்றும் சர்க்கரை இல்லாத இஞ்சி டீ ஒரு சிறந்த நச்சு நீக்கியாகும். ஒரு சிட்டிகை தேயிலை இலைகளை தண்ணீரில் காய்ச்சி, அதில் இஞ்சியை நசுக்கி சேர்க்கவும். சுவையை அதிகரிக்க எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கலாம். இந்த பொருட்கள் அனைத்தும் முழு உடலையும் நச்சு நீக்க சிறந்தவை. இஞ்சி டீ அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. தினமும் இஞ்சி டீ குடிப்பதால் சுவாசக் குழாயில் உள்ள நச்சுகள் வெளியேறி நமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரலை பலப்படுத்துகிறது.

பிராணாயாமம்

பிராணயாமம் என்பது ஒரு பிரபலமான யோகா போஸ் ஆகும், இது நெரிசல், வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதற்கும், ஆரோக்கியமற்ற அசுத்தங்கள் அனைத்தையும் வடிகட்டுவதற்கும் மக்கள் பாஸ்ட்ரிகா மற்றும் கபால் பார்தியை நாடலாம். இந்த சுவாசப் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்தி அதன்ன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

டிடாக்ஸ் தண்ணீர்

நுரையீரல் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க டிடாக்ஸ் தண்ணீர் சிறந்த வழியாகும். இதைத் தயாரிக்க, ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, ஒரு தேக்கரண்டி, சீரகம், கொத்தமல்லி தூள் மற்றும் புதிதாக நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். பிறகு நன்றாகக் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு குவளையில் ஊற்றவும். இது நுரையீரல் மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும்.

தேன்

தேன் நுரையீரலை சுத்தப்படுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்ற, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது என்பது பலர் அறியாதது. சிறந்த முடிவுகளுக்கு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

மஞ்சள், இஞ்சி தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள்

மஞ்சள், உலர் இஞ்சித் தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து அல்லது பொடி வடிவில் ஒன்றாக அல்லது தனித்தனியாக சாப்பிடலாம். இது நுரையீரலின் நச்சுத்தன்மைக்கு உதவுகிறது மற்றும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

No comments:

Post a Comment