முதுகு வலி, மூட்டு வலி, உடல் வலி என அனைத்தையும் போக்கும்.. எளிய மருந்து இதோ.!


முதுகு வலி, கை, கால் வலி, இடுப்பு வலி மூட்டு வலி போன்ற உடல் வலிகள் தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் முதியோர்களுக்கு மட்டுமே மூட்டு வலி போன்ற வலிகள் ஏற்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர்.

இதற்கு காரணம் உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாதது தான் முக்கிய காரணம். அதன்படி உடலில் கால்சியம் குறைபாடு, சுண்ணாம்பு சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் கை கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் வலிகள் ஏற்படுகிறது.

பொதுமக்கள் இந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் தாமாகவே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதால் கிட்னி கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற வலிகளை குணப்படுத்த மாத்திரைகள் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்யலாம். அந்த வகையில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் மிளகு ஒரு ஸ்பூன் சேர்த்து மூன்றையும் லேசாக வறுத்து மிக்ஸியில் நன்றாக பொடி செய்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு 200 மில்லி லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து காலை, மாலை என இரு வேளையிலும் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து வலிகளும் காணாமல் போய்விடும்.

No comments:

Post a Comment