இன்னும் சில நாட்களே இருக்கு..பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா..எப்படி செக் செய்வது?

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

அதன் பிறகு பான்கார்டு பயனற்றதாகி விடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்வது என்ற விவரங்களை பார்க்கலாம்.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

எனினும், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. அதன்படி பான் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்து வந்தனர்.

31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது

தற்போது பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி ஆதாரை இணைக்க வேண்டும். ஆனால், இப்படி அபராதம் செலுத்தி ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் அடுத்து வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த காலக்கெடு இனியும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

பான் எண்ணை இணைப்பது கட்டாயம்

எனவே இனி காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. வருமான வரி சட்டம் 1961 படி ஆதார் எண்ணுடன் பான் என்ணை இணைப்பது கட்டாயம் என்று தெரிவித்து இருந்த வருமான வரித்துறை, பயனர்கள் தங்கள் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள லிங்க் ஒன்றையும் பகிர்ந்து இருந்தது. இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

மெனுவை கிளிக் செய்ய வேண்டும்

வருமான வரி செலுத்துபவர்கள் வருமான வரித்துறையின் e-filing இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தோன்றும் ஹோம் பேஜில் , குயிக் லிங்க்ஸ் (Quick Links) லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆதார் ஸ்டேடஸ் என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓபன் ஆகும் பக்கத்தில் இரண்டு காலங்கள் காட்டும். அதில் பான் எண் மற்றும் ஆதார் எண்களை இருவேறு இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மெசேஜ் தோன்றும்

நாம் கொடுத்த பதிவுகளை வைத்து வருமான வரித்துறையின் சர்வரில் செக் செய்யப்பட்ட பிறகு திரையில் ஒரு பாப் அப் தோன்றும். உங்கள் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கபட்டு இருந்தால் உங்கள் பான் எண் ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற மெசேஜ் திரையில் தோன்றும். இரண்டும் இணைக்கப்படாமல் இருந்தால் , ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படவில்லை என்ற மெசேஜ் தோன்றும். ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க இதை கிளிக் செய்யவும் என்றும் ஒரு லிங்க் காட்டப்படும்.

எப்படி செக் செய்வது என்று

ஒருவேளை, ஆதார் - பான் எண் இணைப்பு நிலுவையில் இருக்கும் பட்சத்தில், உங்கள் ஆதார் - பான் எண் இணைப்பு கோரிக்கை UIDAI சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று மெசேஜ் தோன்றும். சிறிது நேரம் கழித்து ஆதார் ஸ்டேட்ஸ் லிங்கை கிளிக் செய்யவும் என்று மெசேஜ் காட்டப்படும். இது தவிர வருமான வரித்துறை இணையதளத்தில் லாக் இன் செய்தும் வரி செலுத்துபவர்கள் ஆதார் -பான் இணைக்கப்பட்டுள்ளதா? என்று சரிபார்க்க முடியும். இதன்படி எப்படி செக் செய்வது என்று இங்கே பார்ப்போம்.

ஆதார் ஸ்டேடஸ் ஆப்ஷனை

வருமான வரித்துறை இணையதளத்தில் லாக் இன் செய்த பிறகு, வருமான வரித்துறை முகப்பு பக்கத்தில் இருக்கும் லிங்க் ஆதார் ஸ்டேடஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதேபோ, மை புரொபில் பக்கத்தில் சென்றும் லிங் ஆதார் ஸ்டேடஸ் ஆப்ஷனில் கிளிக் செய்து பரிசோதித்துக் கொள்ளலாம். இதில் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் ஆதார் எண் திரையில் தோன்றும். ஒருவேளை, இணைக்கப்படாவிட்டால், ஆதார் எண்ணை இணைக்குமாறு மெசேஜ் தோன்றும்.

ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால்

இதுபோக மெசேஜ் மூலமாகவும் செக் செய்து கொள்ள முடியும். வரி செலுத்துபவர்கள் 567678 or 56161 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் பான் எண்ணுடன் ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இணைக்கப்படவில்லை என்றால் ஆதார் எண் வருமான வரித்துறை டேடே பேசில் இணைக்கப்படவில்லை என்றும் மெசேஜ் வரும்.

No comments:

Post a Comment