தமிழ்நாட்டில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் மொத்தம் 9.2 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதனையடுத்து பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடிந்த நிலையில் , ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 17-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கும், பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment