சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பிளஸ் 2வில் 88.3 சதவீதம் பேரும், 10ம் வகுப்பில் 93.12 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 முடிவுகளில் இதில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு மண்டலம் (கர்நாடகா) 2ம் இடமும்,
சென்னை மண்டலம் (தமிழகம்) 3ம் இடமும் பிடித்தன.
நாடு முழுவதும் பிப்.,15 முதல் ஏப்., 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு எப்போது வரும் என மாணவர்கள் காத்திருந்தனர்.
இந்த தேர்வில் நாடு முழுவதும் 88.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதில் திருவனந்தபுரம் மண்டலம் 99.91 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூரு மண்டலம் (கர்நாடகா) 2ம் இடமும், சென்னை மண்டலம் (தமிழகம்) 3ம் இடமும் பிடித்தன.அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இம்முறை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடிவுகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடவில்லை.https://results.cbse.nic.in/, cbseresults.nic.in, digilocker.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment