சத்துணவு திட்டத்தில்‌ 2 முதல்‌ 6 வயது குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல்.! வெளியான அறிவிப்பு.!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சத்துணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌, இயக்குநர்‌ மற்றும்‌ குழும இயக்குநர்‌ மற்றும் சமூக நல இயக்குநரின்‌ கருத்துருக்களை கவனமுடன்‌ பரிசீலனை செய்து, அவற்றை ஏற்று குழந்தைகள்‌ மையங்களில்‌ சத்துணவுத்‌ திட்டத்தில்‌ பயனடைந்து வரும்‌ 2 முதல்‌ 6 வயது குழந்தைகள்‌ மற்றும்‌ புரட்சித்‌ தலைவர்‌எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டத்தில்‌ பயன்பெறும்‌ பள்ளிக்‌ குழந்தைகளுக்கு, கலைஞர்‌ கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல்‌ வழங்கப்படும்.

குழந்தைகள்‌ மையங்கள்‌ அல்லது சத்துணவு மையங்களில்‌ பயனடைந்து வரும்‌ குழந்தைகளுக்கு நாள் தோறும்‌ சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின்‌ அளவில்‌ அரிசி பயன்படுத்தவும்‌, இனிப்பு பொங்கல்‌ வழங்க தேவைப்படும்‌ வெல்லம்‌ மற்றும்‌ இதர பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள்‌ சத்துணவு அமைப்பாளர்கள்‌ இனிப்புப்‌ பொங்கல்‌ வழங்கப்படும்‌ நாளின்‌ உணவூட்டு செலவினத்திற்குள்‌ (எரிபொருள்‌ நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும்‌ அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment