அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வு - விலக்கு பெறும் வயது 55 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான சிறப்பு துறைத் தேர்வுகளுக்கு விலக்கு பெறும் வயதை தமிழ்நாடு அரசு 55ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான வயதை தமிழ்நாடு அரசு 53லிருந்து 55 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிறப்பு மற்றும் துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான வயது வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் அடைவதற்கு அவர்களுடைய பணி விவரங்கள் மன நிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் 53 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். தொடர்புடைய அரசு அலுவலர் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து முறையாவது முயற்சி செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment