தமிழக மின் வாரியத்தில் பணிபுரிவோருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2019 டிச., முதல் நிலுவையில் உள்ள ஊதியத்தை, 6 சதவீதம் உயர்த்தி வழங்கவும்; 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு கூடுதலாக, 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும், சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஊதியத்தை உயர்த்தி, நேற்று முன்தினம், வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்கள், அதிகாரிகளின் பதவிக்கு ஏற்ப, தலா ஒருவருக்கு குறைந்தது மாதம், 2,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரை, கூடுதலாக ஜூலை முதல் கிடைக்கும். இதனால் மின் வாரியத்திற்கு, 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
No comments:
Post a Comment