நீங்கள் புதிய முகவரிக்கு மாறுகிறீர்களா? ஆன்லைனில் ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டுமா? சூப்பர் அப்டேட்

நீங்கள் கவலை வேண்டாம், இப்போது ஆன்லைனில் TNPDS (தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு) ரேஷன் கார்டில் உங்கள் முகவரியை மாற்றலாம். எப்படி என்பதை பாருங்கள்.

ரேஷன் கார்டு (Ration Card) பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல, பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" (One nation one ration card) திட்டத்தின் கீழ் எங்குவேண்டுமானாலும் ரேஷன் கார்டு இருந்தால் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (One Nation One Ration Card) என்ற திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த ரேஷன் கடைகளுககு சென்றாலும் பொருட்களை வாங்க உங்க முகவரியை ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

www.pdsportal.nic.inஎன்ற லிங்க்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் உள்நுழையுங்கள் . இந்த இணையதளத்தில் உள்ள முகப்புப் பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள 'மாநில அரசு இணையதளங்கள்' ('State Government Portals') என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு மாநிலங்களின் பட்டியலை நீங்கள் பெறுவீர்கள். இப்போது எந்த மாநிலம் வேண்டுமோ அந்த மாநிலத்தில் இருக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுங்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த மாநிலத்துடன் தொடர்புடைய மற்றொரு பக்கத்திற்கு அது உள்ளே செல்லும்.

நீங்கள் இப்போது 'ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம்' அல்லது 'ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம்' ('ration card address change form' or 'change in ration card form') தொடர்பான பொருத்தமான லிங்க்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யூசர் ஐடி, பாஸ்வேர்டு கேட்கும். அதை இல்லாவிட்டால் உருவாக்கி கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்நுழையுங்கள். தேவையான விவரங்களை சரியாக நிரப்பி, பின்னர் 'சமர்ப்பி' (Submit) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்., பின்னர் தேவை எனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

இந்த செயல்முறையைப் பின்பற்றும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு போர்ட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெவ்வேறு மாநிலங்களுக்கான ஸ்டெப்ஸ்கள் மாறுபடும். அதற்கு தகுந்தாற் போல் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில்https://tnpds.gov.in/login.xhtmlஇந்த இணைய முகவரிக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ் நாட்டில் நீங்கள் ரேஷன் கார்டு முகவரியை மாற்ற https://tnpds.gov.in/login.xhtml என்ற இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் கடைசியாக கீழே பார்த்தால் முகவரி மாற்றம் என்று இருக்கும். அதற்குள் சென்றால் , நீங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் கேட்கும். அத்துடன் அதில் தோன்றும் கேப்ட்சியாவை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் பதிவு செய்த மொபைலுக்கு ஓடிபி வரும். அதை நீங்கள் டைப் செய்த பின் திரையில் உங்கள் இப்போதைய முகவரி தோன்றும்.

அதற்குக் கீழ் புதிய காலம் ஓபன் ஆகும். அதில் உங்கள் வீட்டு எண், உங்கள் தெரு பெயர், உங்கள் ஊர், எந்த தாலுகா, எந்த மாவட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். அத்துடன் நீங்கள் குடியிருப்பதற்கான அத்தாச்சி சான்றிதழ்களை இணைக்க வேண்டும். 

உதாரணமாக நீங்கள் வாடகைக்கு குடி இருக்கிறீர்கள் என்றால் வாடகை ஒப்பந்த பத்திரம், லீசுக்கு குடியிருக்கிறீர்கள் என்றால் லீஸ் பத்திரம் ஆகியவற்றின் நகலை ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும். இவை இல்லாவிட்டால் உங்கள் வீட்டு மின்சார பில், குடிநீர் கட்டண பில் அல்லது கேஸ் பில் , டெலிபோன் பில் என அல்லது ஏதேனும் குடியிருப்புக்கான சான்றுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக பதிவேற்று என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

எல்லாம் முடிந்த பின்பு இணைக்கப்பட்டுள்ள ஆவணம் பதிவேற்றப்பட்டுள்ளது என்று திரையில் தோன்றும். அதை நீங்கள் ஒரு முறை செக் செய்துவிட்டு, உறுதிப்படுத்து என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்று வரும். அதன் பிறகு அதன் ஸ்டேட்டஸ் எப்படி இருக்கிறது என்பதைhttps://tnpds.gov.in/நீங்கள் அறிய முடியும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

அதில் உங்கள் மொபைலுக்கு குறிப்பு எண் வந்திருக்கும். அந்த குறிப்பு என்னை நீங்கள் அதில் டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உள்ளே சென்றால், நிலை குறித்து நீங்கள் என்ன நிலையில் உள்ளது என்பதை அறியலாம். கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, ஆவண சரிபார்ப்பு , துறை சரிபார்ப்பு, கோரிக்கை அனுமதிக்கப்பட்டது என்ற நான்கு நிலை இருக்கும். கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்பது முதலில் தோன்றும். அடுத்து ஒவ்வொரு படிநிலை முடிந்த பின்பு இறுதியாக கோரிக்கை அனுமதிக்கப்பட்டது என்று வரும். அப்படி வந்துவிட்டால் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முகவரியை ரேஷஞ அதிகாரிகள் மாற்றி விட்டார்கள் என்று அர்த்தம் . உங்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் கோரிக்கை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment