8 TAMIL இயல் 2 - ஓடை ONE MARK STUDY MATERIALS

 1.      தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ என புகழப்படுபவர்.

        அ)     பாரதியார்                               

        ஆ)    பாரதிதாசன்

        இ)     சுரதா                                       

        ஈ)      வாணிதாசன்

2.      வாணிதாசனின் இயற்பெயர்.

          அ)     எத்திராசலு                                    

          ஆ)    பகலவன்

          இ)     கோவேந்தன்                          

          ஈ)      ரங்கராஜன்

3.      வாணிதாசனின் சிறப்புப் பெயர்.

          அ)     பாவலரேறு                                      

          ஆ)    பாவலர்மணி

          இ)     கலித்தொகைக் கவிஞர்                   

          ஈ)      கவிஞரேறு

4.      வாணிதாசனுக்கு ‘செவாலியர்’ விருது வழங்கிய அரசு.

          அ)     தமிழக அரசு                           

          ஆ)    புதுச்சேரி அரசு

          இ)     பிரெஞ்சு அரசு                      

          ஈ)      இலங்கை அரசு  

5.      பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

          அ)     பெரியவர் இலக்கியம்                   

          ஆ)    தொடுவானம்

          இ)     எழிலோவியம்                        

          ஈ)      கொடிமுல்லை

( விடையாக வருவது தவிர ஏனையவை, வாணிதாசனின் படைப்புகள்)


6.      செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது.....

          அ)     கடல்          

          ஆ)    ஓடை                  

          இ)     குளம்                   

          ஈ)      கிணறு

7.      ‘செஞ்சொல்’ – பிரித்து எழுதுக.

          அ)     சிவப்பு+சொல்              

         ஆ)    சிவந்த+சொல்    

       இ)     செம்மை+சொல்          

       ஈ)      செஞ்+சொல்

8.      வள்ளைப்பாட்டு என்பது .........................

          அ)     கல் விளையாட்டின்போது பாடப்படுவது

          ஆ)    பந்தாடும்போது பாடப்படுவது

          இ)     நெல்குத்தும்போது பாடப்படுவது

          ஈ)      நீராடும்போது பாடப்படுவது

9.      ‘தமிழச்சி’ என்ற நூலை இயற்றியவர்.

          அ)     பாரதியார்                    

         ஆ)    பாரதிதாசன்      

        இ)     வாணிதாசன்                       

        ஈ)      மேத்தா

10.    ‘ஓடை+ஆட+ - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்......

          அ)     ஓடைஆட                    

        ஆ)    ஆடையாட        

      இ)     ஓடையோட                        

      ஈ)      ஓடைவாட

No comments:

Post a Comment