ஒரு மாம்பழத்தின் விலை 1,000 ரூபாய்.

மத்திய பிரதேசத்தில் விளையும், 'நுார்ஜஹான்' ரக மாம்பழம் ஒன்றின் விலை, 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு, அலிராஜ்பூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் கண்டுள்ள, 'நுார்ஜஹான்' ரக மாம்பழங்களுக்கு, கூடுதல் விலை கிடைக்கிறது. ஓரு மாம்பழம் 500 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அங்குள்ள விவசாயி சிவ்ராஜ்சிங் ஜாதவ் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நுார்ஜஹான் ரக மாம்பழம், நம் நாட்டில் அலிராஜ்பூர் மாவட்டம் கத்திவாடா பகுதியில் மட்டுமே விளைகிறது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் நிலையில் சாதகமான வானிலை காரணமாக, தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளது. இந்த மாம்பழத்தின் சுவை, வேறு எந்த மாம்பழத்திலும் கிடைக்காது.

இந்த முறை ஒரு மாம்பழம் 2 முதல் 3.5 கிலோ வரை வரும் என, தெரிகிறது.என் தோட்டத்தில் மூன்று மரங்களில் காய்த்துள்ள 250 காய்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது.

கடந்த 2019ல் ஒரு பழம் 1,200 ரூபாய் வரை விற்பனை ஆனது. கொரோனா பாதிப்பால், தற்போது ஒரு பழத்திற்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.(படம் வைக்கவும்)

No comments:

Post a Comment