மீண்டும் செயல்படத் தொடங்கியது இ-பதிவு இணையதளம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய, இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாட்டில் இ-பதிவு நடைமுறையுடன் பல்வேறு சேவைகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை இ-பதிவு இணையதளம் திடீரென முடங்கியது.

இதனால் அதில் பதிவு செய்ய முயன்ற பலர் அவதிப்பட்டனர். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரே நேரத்தில் ஏராளமானோர் இ-பதிவு செய்ய முயற்சித்ததால் இணையதளப் பக்கம் முடங்கியதாகவும், இன்று மாலைக்குள் முழுவதும் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment